இந்தியாவில் கொரோனா இரட்டிப்பு விகிதம் 17.4 நாட்களாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது.
இன்று தமிழகத்தில் அதிகபடியாக ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,00,438 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 4ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,400 ஆக உள்ளது. மேலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.