Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கொரோனா பாதிப்பு” MI vs CSK….. கூட்டத்தை தவிர்க்க….. IPL ஒத்திவைப்பு…..!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக IPL போட்டியை ஒத்திவைக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் என படிப்படியாக பரவி இறுதியாக இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நோய் சீனாவைப் போல் அதிகளவு தாக்கத்தை  இந்தியாவில் ஏற்படுத்தி விடாமல் தடுப்பதற்காக ஹோலி பண்டிகையை இந்த வருடம் கொண்டாடுவதை மக்கள் தவிர்க்குமாறு பிரதமர் மோடி அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி,

மத்திய அரசும், சுகாதாரத் துறையும் இணைந்து பொதுமக்கள் ஆங்காங்கே கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக திருவிழா உள்ளிட்ட பண்டிகைகளை  ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியது அந்த வகையில், 2020 ஐபிஎல் தொடரை கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மார்ச் 29ஆம் தேதி தொடங்க உள்ள இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையே நடைபெறும் போட்டி என்பதால்  இந்த ஒத்திவைப்பு செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |