Categories
தேசிய செய்திகள்

2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு…. ஏர்- இந்தியா அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைப்பு!!

கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகம் 2 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

புத்தபூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏர்-இந்தியா தலைமை அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்த உள்ளதாகவும், அதற்காக 2 நாட்கள் அலுவலகம் மூடப்படும் வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதிகம் பாதித்த மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. டெல்லியில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,639 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவுக்கு 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை அழைத்து வர ஏர்-இந்தியா விமானங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அலுவலகம் 2 நாட்களுக்கு சீல் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |