Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட பெண்… மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்…!!

ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக எண்ணி அடக்கம் செய்தவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கட்டையா என்பவரின் மனைவி கிரிஜம்மா. கடந்த 12ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மே 15ஆம் தேதி கட்டாய தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது படுக்கையில் அவரை காணவில்லை. மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக ஊழியர்களிடம் கேட்டபோது பிணவறைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர்.

அங்கு ஒரு உடலை காட்டியுள்ளனர். அது தனது மனைவி தான் என்று எண்ணி அந்த உடலை வாங்கிக் கொண்டுவந்து அடக்கம் செய்துள்ளனர். இதையடுத்து கிரிஜம்மா தான் குணமடைந்து தன்னை அழைக்க யாரும் வராத காரணத்தினால் மருத்துவமனையில் இருந்து வந்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அவரே வீட்டுக்கு வந்துள்ளார். அவரை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பிறகு தங்கள் இறுதிசடங்கு நடத்தியது வேறு ஒருவருக்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |