Categories
உலக செய்திகள்

குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாக்கப்படும் இறந்த உடல்கள்… கோர தாண்டவத்தால் அரசின் அதிரடி முடிவு… பிரபல நாட்டில் வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் தலை நகரமான நியூயார்க்கில் கொரோனா தொற்றால் கடந்த வருடம் உயிரிழந்தவர்களுடைய உடல்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய உடல்கள் புதைக்கப்படாமல் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்திட அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அங்கு உள்ள நிலைமை சீரான பிறகு உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் அவர்களது உடல்கள் நியூயார்க் நகர நிர்வாக தரப்பில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனாவால் பலியான சுமார் 750 உடல்கள் தற்போது வரை குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்படுகிறது என்று நியூயார்க் நகர சிட்டி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் கொரோனாவால் இறந்தவர்களுடைய உடல்கள் அவர்கள் குடும்பத்தினரின் விருப்பத்துடன் ஹார்ட் தீவு பகுதியில் புதைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.

Categories

Tech |