கொரோனாவின் காரணமாக உயிரிழந்த நபரை மாரடைப்பால் இறந்தார் என்று இறுதிச்சடங்கை முடித்த சம்பவதிற்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பீலி ஜமால் முஹம்மது. தொழிலதிபரான இவர் சென்னையில் மண்ணடியில் வசித்து வந்துள்ளார். தொழில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் துபாய் சென்று சென்னை திரும்பிய ஜமாலை விமான நிலையத்தில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்த அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என முத்திரையிட்டு அனுப்பினர்.
கடந்த 2ஆம் தேதி கடுமையான இருமல் மற்றும் சளி காய்ச்சலால் அவதிப்பட்ட ஜமாலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அடுத்த சில மணி நேரத்தில் கடுமையான மூச்சுத்திணறலால் ஜமால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனா முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே வழக்கறிஞரான ஜமாலின் மகன் தன் செல்வாக்கை உபயோகப்படுத்தி ஜமாலின் சடலத்தை சென்னையிலிருந்து வேன் மூலமாக எடுத்துச் சென்று 300 பேர் கூடி அடக்கம் செய்துள்ளனர்.
மறு நாள் பரிசோதனையின் முடிவில் ஜமால் கொரோனாவினால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இறுதி சடங்கில் பங்குபெற்ற அமைச்சர் மணிகண்டன் உள்பட 300 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தள்ளப்பட்டனர். அடக்கம் செய்யப்பட்ட இடத்தை மூடி அங்கு யாரும் செல்லக்கூடாது என்றும், அங்கு இருப்பவர்கள் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜமாலின் மகள் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனது தந்தைக்கு கொரோனா இருக்கிறது என்று செய்தி பரப்புவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என எச்சரித்துள்ளார். இதன்காரணமாக இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையில் ஜமாலின் மகன்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் தடை உத்தரவுக்கு ஒத்துழைக்காமல் 300க்கும் அதிகமானோரை கொரோனா வளையில் சிக்கவைத்த ஜமால் குடும்பத்திற்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.