நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல நாடுகள் இதன் பாதிப்பை கட்டுபடுத்தி விட்டோம் என அறிவித்த போதிலும், இரண்டாவது அலையாக, அந்த நாட்டையே மீண்டும் தொற்றிக்கொண்டு இந்த கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கொரோனா மரணம் ஒன்று நிகழ்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏற்பட்ட கொரோனாவின் இரண்டாவது அலையின் ஒரு பகுதியாக ஆக்லாந்தை சேர்ந்த 50 வயதான முதியவர் ஒருவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நியூசிலாந்தில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.