பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு மேலும் 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண் ஒருவரும், திருச்சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயது ஆண் ஒருவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது ஆண் ஒருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.