தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூலை 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 74,622 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 957 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் மட்டும் இன்று காலை நிலவரப்படி 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 963 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.