தமிழக்த்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த 60 வயது நபர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏப்ரல் 1ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார. ஏற்கனவே இராமநாதபுரத்தை 71வயதான நபர் கொரோனாவால் சென்னை ஸ்டாலின்லி மருத்துவமனையில் உய்ரிழ்ந்தார்.
2ஆம் தேதி காலை 9.45க்கு அனுமதிக்கப்பட்ட 71வயதான நபர் 2ஆம் தேதி காலை 11.45க்கே இறந்தார். ஏப்ரல் 2ல் இறந்த நபருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இதுவரை 2 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயிரிழந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 485பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 7 பேர் குணமடைந்துள்ளனர்.