Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே கவனமா இருங்க..! மனித உயிரை குடிக்கும் கொரோனா… அடுத்தடுத்து தொடரும் இழப்புகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் ஆறு பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரும், 53 வயது ஆண் ஒருவரும், 82 வயது முதியவர் ஒருவரும், 55 வயது ஆண் ஒருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவரும், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் ஒருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |