கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இது குறித்து தமிழக அரசு முறையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் மரணம் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ளது. பரிசோதனையும் போதுமான அளவில் நடத்தப்படவில்லை. இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.