Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் 38,000-ஆக அதிகரிக்க வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,000 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பெங்களுருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி கழகம், இந்திய அறிவியல் நிறுவனம் மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் புனேவில் உள்ள ராணவத்திற்கான மருத்துவக்கல்லூரி ஆகியவை இணைந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்த தரவு இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததன் விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவில் உள்ள தற்போதைய பாதிப்புகள் மே மாதம் மத்தியில் எவ்வாறு இருக்கும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. அதன்படி மெய் மாதம் மத்தியில் 38,220 பேர் உயிரிழக்கலாம் என்றும், 30 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்போது சுமார் 70,000 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருக்கலாம் என்றும் புள்ளி விவரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்து பாதிப்புகள் குறைந்தால் புள்ளிவிவரங்கள் மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 21,393 ஆக உயர்ந்துள்ளது. இறப்புகள் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 16,454 பேர் காரோணவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று இதுவரை 4,257 பேர் குணமடைந்துள்ளனர்.

Categories

Tech |