கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது 13 வயது மகளை தோளில் சுமந்தபடி அடக்கம் செய்வதற்கு எடுத்துச் சென்ற தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் நோயாளிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திலீப் என்பவரின் மகள் சோனுக்கு அஜீரண கோளாறு காரணமாக வயிற்று வலி ஏற்பட்டிருந்தது. இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினர்.
இதையடுத்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். திங்கட்கிழமை இறந்த தனது மகளை தோளில் சுமந்தபடி ராம்நகர் சாலையில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதையடுத்து அவரிடம் இதுகுறித்து விசாரணை செய்த போது தனக்கு போதுமான அளவு படிப்பறிவு இல்லாத காரணத்தினால், விதிமுறைகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்பது குறித்து தெரியாது.
மேலும் எந்த அதிகாரிகளும் எனக்கு உதவ முன்வரவில்லை. மருத்துவமனையில் ஒரு ஊழியர் தனது மகளின் சடலத்தை ஒரு தாளை கொண்டு மூடி வைத்திருந்தார். இறப்பு சான்றிதழ் வழங்கிய அவர் பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் தனக்கு வழங்கவில்லை எனவும் கூறியிருந்தார். தனக்கு தெரிந்த ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி எரிப்பதற்கு விறகுகளை வாங்கிக் கொண்டு என் மகளின் இறுதி சடங்கை செய்தேன் எனவும் அவர் கூறினார்.