அமெரிக்காவில் இரு வாரங்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அனைத்து நாடுகளையும் பாடாய்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா சென்ற இரு வாரங்களில் பெருமளவு பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. தினமும் 43,000 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்ததை விட இப்பொழுது 21 விழுக்காடு குறைவாகவே வைரசின் தாக்கம் உள்ளதாக ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பேராசிரியர் மோனிகா காந்தி இதுகுறித்து கூறுகையில், இந்தியா மற்றும் பிரேசிலை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அமெரிக்காவில் பெருமளவு தோற்று குறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கர்கள் முககவசம் அணிந்து இருப்பதும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் தான் வைரஸ் தொற்று குறைவது சாத்தியமாக அமைந்தது. மேலும் சென்ற இரு வாரங்களில் உள்ள கணக்கெடுப்பின்படி, 7.3 ஆக இருந்த தொற்றின் எண்ணிக்கை தற்பொழுது 6.1 விழுக்காடாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.