Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ‘கொரோனா’ பேரிடராக அறிவிப்பு : மத்திய அரசு …!!

கொரோனா வைரஸ் தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமா பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றைக்கை என்பது அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ள, கடிதத்தில் இது பேரிடர் என்பதால் மாநில அரசுகள் தங்களிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். மத்திய அரசு ஒப்புதல் என்பது கட்டாயம் இல்லை.  கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை  வழங்கப்படலாம் என்ற ஒரு விஷயத்தையும் அதில் மத்திய அரசு கூறியுள்ளது.

அதேபோல ஒவ்வொரு மாநில அரசும் கோரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சை தொகை , அதற்கான உபகரணங்கள் , அவர்களுக்கான தற்காலிக முகாம் ,  உணவு , உடை, மருத்துவம் என பேரிடருக்காக மாநில அரசு வைத்துள்ள தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனைத்து மாநிலத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |