தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 5ம் நாளாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.96% ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.930% ஆக உள்ளது.
இதுவரை கொரோனவால் 20,575 ஆண்கள் ( 61.91% )பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 12,637 பேர் (38.03%) பாதிக்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள் 17 பேர் (0.051%) பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று 31,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மொத்த பாதிப்புகளின் விகிதம் 71.41% ஆக அதிகரித்துள்ளது.