தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில், இன்று ஒரே நாளில் மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 79 பேருக்கு இன்று தொடரு இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் 10 விமானங்களில் தமிழகம் வந்த 2,139 பேரில் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.