Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோய் தொற்று குறித்து டாக்டர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ… வைரல்..!!

தலைநகர் மும்பையில் நிலவிவரும் மோசமான சூழ்நிலை குறித்து தொற்றுநோய் நிபுணரான டாக்டர் ஒருவர் கண்ணீருடன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் மராட்டிய மாநிலம் தான் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு மோசமான நிலைமையில் உள்ளது. நாளொன்றுக்கு பாதிப்பு 55 ஆயிரத்தை எட்டி செல்கிறது. தற்போது 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மருத்துவமனை முழுவதும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றன.

அதிலும் தலைநகர் மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கையின்றி  தவித்து வருகின்றனர். இங்கு உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் 80% நிரம்பிவிட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் வென்டிலேட்டர் வசதியுள்ள படுகைகளில் 98% நிரம்பியது. மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பாகவே ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மற்றும் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து தொற்று நோய் நிபுணரான டாக்டர் திருப்தி கிலாடா கண்ணீருடன் பேசும் வீடியோ வெளிவந்துள்ளது. அதில் ‘ இதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. நாங்கள் அதிகமான நோயாளிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. படுக்கைகள் இல்லாததால் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதலில் நீங்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன், எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு கொரோனா வரவில்லை என்றாலோ அல்லது கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலோ அதன் மேலிருக்கும் அச்சத்தை தவிர்த்து விடாதீர்கள். இளைஞர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம்.

அனைத்து இடங்களிலும் கொரோனா நிரம்பி பரவியுள்ளது. அதனால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்றுங்கள். தகுதியுள்ளவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுங்கள். தடுப்பூசி கடுமையான பாதிப்பிலிருந்து தங்களின் உயிரை காக்கக்கூடிய செயல் திறன் வாய்ந்தது என்று கண்கலங்கியபடி கூறி உள்ளார்.

Categories

Tech |