கொரோனா நோய் பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. புதுடெல்லியில் 2-வது அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 7 யூனியன் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், காவல்துறை டி.ஜி.பி ஆகியோருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வின் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அந்த ஆய்வில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி அயோக் உறுப்பினர், வி.கே.பால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவா ஆகியோர் கலந்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள நிலைமைகளை கேட்டறிந்து அடுத்த மூன்று வாரத்திற்கு நோய் பரவல் இன்னும் வேகமாக பரவலாம் இதனால் அனைத்து மாநிலங்களும் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அனைத்து மாநிலங்களிலும் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், எந்த சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தயாராக இருங்கள் என்றும் கூறினார்கள். அதன்பின் சமீபகாலமாக லடாக், காஷ்மீர், லட்சத்தீவு போன்ற மாநிலங்களில் நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. எனவே அங்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிறகு டெல்லி சண்டிகர் பகுதிகளில் இதற்கு முன்பாகவே நோய்த்தொற்று மோசமான நிலையில் இருந்து வருகின்றது. அங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விவாதம் ஆய்வில் நடத்தினார்கள். கொரோனா நோய் பரவல் உச்சத்தை தொடுகின்ற நேரம் வந்துவிட்டது. அதனால் எதிலும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. எனவே எதிலும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள் என்று மாநில அதிகாரிகளை மத்திய அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.