Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

33 மாவட்டங்களில்…. 690 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தமிழகத்தை பொறுத்தவரை 621 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு சிக்சிகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2ஆவதாக கோவையில் 64 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து திண்டுக்கல்லில் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு : 

மாவட்டம்

சிகிச்சை பெற்று வருபவர்

சென்னை 149
கோவை  64
திண்டுக்கல் 45
திருநெல்வேலி 38
திருச்சி 31
நாமக்கல் 28
ஈரோடு 27
ராணிப்பேட்டை  26
தேனி 24
மதுரை  24
கரூர்  22
விழுப்புரம்  20
திருப்பூர்  20
செங்கல்பட்டு 20
தூத்துக்குடி 17
கடலூர் 13
திருவாரூர்  12
திருவள்ளூர் 12
சேலம்  12
விருதுநகர்  11
திருப்பத்தூர் 11
தஞ்சாவூர் 11
நாகப்பட்டினம்  11
காஞ்சிபுரம் 7
வேலூர்   6
கன்னியாகுமரி 6
திருவண்ணாமலை 5
சிவகங்கை  5
நீலகிரி 4
ராமநாதபுரம் 2
கள்ளக்குறிச்சி  2
பெரம்பலூர்  1
அரியலூர்  1

 

Categories

Tech |