கொரோனா காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வரவேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், போதிய பயணிகள் இல்லாததால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 50 விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுபவை. 54 விமானங்கள் சென்னைக்கு வரும் விமானங்கள். மேலும் உள்நாட்டு விமான நிலையத்தில் 99 விமானங்கள், சர்வதேச விமான நிலையத்தில் வந்தே பாரத் விமானங்கள் உள்பட 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றது.