சீனாவில் உருவான கொரானா வைரஸ் பல நாடுகளை ஆட்டிபடைத்தது வருகிறது. கொரானாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் வருகிறது.
இதனையடுத்து கொரானா வைரசைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திவருகிறது. இதில் தற்போது பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர், கடை ஊழியர்கள் முன் பொதுமக்கள் யாராவது இருமினால் 2 ஆண்டுகள் சிறைவிதிக்கப்படும் என பிரிட்டனின் பொது வழக்கு விசாரணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரானாவை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களை பாதுகாத்தால் தான் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என கூறுகின்றனர்.