குராஜரத்தில் அனைத்து வகுப்பு படிக்கும் மாணவர்களும் ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்கள் புதுப்புது உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரப்பப்ட்டது.
முன்பாக உத்தரபிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்ச்சி என்று உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து குஜராத்தில் 10, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தவிர்த்து ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் பாஸ் என்கின்ற உத்தரவு வெளியாகி இருக்கிறது.