Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடி ஒதுக்கீடு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் நகராட்சி நிர்வாகத்திற்கு 6 கோடி, பேரூராட்சிக்கு 2 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 17,140 சுய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன .

Categories

Tech |