கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர். மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் கைதிகளின் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. சிறைக்கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் பரோல், இடைக்கால ஜாமீன் வழங்கி கைதிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.