உலகம் முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மந்திரி மன்சுக் மண்டாவியா கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்களை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கொரோனா முடிவடைந்து விட்டது என்று மக்கள் யாரும் நினைக்க வேண்டாம்.
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. எனவே கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு பொது இடங்களில் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவைகளையும் தொடர்ந்து மக்கள் பின்பற்ற வேண்டும். அனைத்து மக்களும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் நோயாளிகள் பூஸ்டர் தடுப்பூசியை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் தான் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும். மேலும் எந்த ஒரு பாதிப்பும் வந்தாலும் அதை சமாளிப்பதற்கு நாடு தயாராக இருப்பதாகவும், இது தொடர்பான உரிய ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.