Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : மின் கட்டணத்தை இணையத்தளம் அல்லது ஆப் மூலம் செலுத்துங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல் நிலவி வருவதால் மின் கட்டணம் செலுத்த யாரும் அலுவலகதிற்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. மின் கட்டணம் செலுத்தாதவர்கள் http://tangedco.gov.in என்ற இணையத்தளம் அல்லது tneb app மூலம் மின்நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தலாம் என மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |