Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் தமிழகம்…. சென்னையில் 30 பேர், திருவாரூரில் 14 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் குணமடைந்து வருவதும் ஆறுதல் அளித்துவருகிறது.

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேபோல திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் குணமடைந்தனர். திருவண்ணாமலையில் நேற்று 5 பேர் குணமடைந்த நிலையில் இன்று மேலும் 4 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்த 14 பேரில் 7 பேர் திருவாரூர், 7 பேர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |