Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க..! சுகாதாரத்துறையினருக்கு வந்த தகவல்… அதிகாரிகள் அதிரடி பரிசோதனை..!!

நிலக்கோட்டையில் தற்காலிகமாக பூ மார்க்கெட் செயல்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு தற்காலிகமாக பூ மார்க்கெட் அமைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அரசு நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் செங்கட்டாம்பட்டி பிரிவு பகுதியில் தற்காலிகமாக பூமார்க்கெட் செயல்பட அனுமதி அளித்ததையடுத்து பூ மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது.

அதன்பின் அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதையறிந்த சுகாதாரத்துறையினர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அங்கு ஒரு மையத்தை உருவாக்கியுள்ளனர். அதன்பிறகு ஏராளமானோர் பூ மார்க்கெட்டில் இருந்து நைசாக வெளியேறிவிட்டனர். இதையடுத்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி தலைமையில் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Categories

Tech |