மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா மருந்தானது தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதியானது அளிக்கப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசால் இந்த அனுமதியானது வழங்கப்பட்டிருக்கிறது. முதலில் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துகளுக்கு அனுமதிக்கப்படுவதாகவும், அதேபோல ஏற்கனவே இருக்கக்கூடிய கொரோனா மருந்தின் ஒருபகுதியாக இந்த மருந்து பூஸ்டர் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே பல தடுப்பு மருந்துகள் தற்போது இருக்கக்கூடிய நிலையில் உலகளாவிய கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதன் காரணமாக மத்திய அரசும், மாநில அரசுகளும் அதற்கான தயார் நிலையில் இருந்து வருகிறார்கள். குறிப்பாக சுகாதாரத்துறை நடவடிக்கைகளை உறுதி செய்வதன் மூலம் வரக்கூடிய ஒமிக்ரானின் மாறுபாடு இருக்கக்கூடிய கொரோனா புதிய வகை வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
இத்தனை நாட்களாக அடுத்தடுத்து இருக்க கூடிய தடுப்பு மருந்துகள் ஆய்வுக்கூட்படுத்தப்பட்ட பிறகு தான் அனுமதியானது வழங்கப்படும் என்ற ஒரு சூழல் இருந்ததன் காரணமாக இத்தனை நாட்கள் கடந்து, மூக்கு வழியே செலுத்தப்படும் மருந்துக்கான அனுமதியை மத்திய அரசு தற்போது வழங்கி இருக்கின்றது.