கொரோனா வைரஸ் பீதியால் அர்ஜென்டினாவில் கைதிகள் சிறைக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பீதியை அர்ஜென்டினாவில் சிறையில் பெரும் கலவரம் வெடித்தது. தலைநகர் பியூனஸ் அயர்ஸ் சிறையில் கொரோனா பயம் காரணமாகவும், தங்களை விடுதலை செய்யக்கோரியும் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சிறையில் தீவைப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.
இதேபோல் வடகிழக்கு பகுதியில் உள்ள சான்டாஃபே என்ற இடத்தில் உள்ள சிறையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக இதேபோல் பிரேசில் கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலும் சிறைகளில் கைதிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு பலர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.