கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக அயோடின் கலந்த உப்பை மட்டுமே இனி விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும் என்பதால் மத்திய உணவு பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணயம் சார்பில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் பல்வேறு மாற்றங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்,
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அயோடின் கலந்த உப்பை மட்டுமே உப்பு விற்பனையாளர்கள் விற்கவேண்டும் என்று புதிய திருத்தத்தை மேற்கொண்டு உள்ளனர். அயோடின் இல்லாத உப்பை விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால்,
உப்பு விற்பனை அதிகமாக பாதிக்கப்படும் என்பதால் விற்பனையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அயோடின் வாங்கி வந்த பின்பே உப்பளங்களில் அயோடின் கலக்கப்படும். இதற்கு அதிக செலவாகும் என்பதால் அவர்கள் மத்திய அரசு இதற்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.