Categories
கல்வி மாநில செய்திகள்

கொரோனா அச்சம்….! 10ம் வகுப்பு தேர்வு இரத்தா ? குழப்பத்தில் மாணவர்கள் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தொடங்க இருந்தது. கொரோனா காரணமாக ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டு, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்நிலையில் ஏப்ரல் 15 முதல் தேர்வு நடத்துவதாக இருந்தால் அதற்கான அட்டவணை வெளியிடபட்டு இருக்கும், தேர்வறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள், வினாத்தாள்களை ஒவ்வொரு மாவட்ட அனுப்பும் பணி என தேர்வுக்கான ஆயத்தப் பணிகள்  நடைபெற தொடக்கி இருக்கும்.

ஆனால் அரசு சார்பிலலும், தேர்வு துறை சார்பிலும் இப்படியான எந்த ஒரு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி ஏப்ரல் 15 முதல் நடைபெறுமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஏற்கனவே 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களும் இறுதி ஆண்டு தேர்வு இரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா ? என்ற ஒரு குழப்பத்தில் மாணவர்கள் இருப்பதால் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கருத்து கேட்டதாக ஒரு சில செய்திகள் வந்தநிலையில், இது தொடர்பாக விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை தேர்வை ரத்து செய்வது தொடர்பாக யாரிடமும், எந்த ஒரு கருத்தையும் கேட்க வில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா ? இல்லையா என்பது குறித்து மீண்டும் ஒருமுறை முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முதலமைச்சர் தெளிவுபடுத்தா விட்டால் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதுவதில் சிக்கல் ஏற்படும் என்ற ஒரு கவலையையும் அவர்கள் பதிவு செய்திருக்கின்றன.

இதன் அடிப்படையில் ஏப்ரல் 15 முதல் பொதுத்தேர்வு நடைபெறுமா ? அல்ல மேலும் சில நாட்கள் தேர்வு தள்ளி போகுமா ? என்பது குறித்து விரைவில் அரசானது ஒரு உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும்,  இதனால் மாணவர்கள் மன ரீதியாக குழப்பம் அடைந்திருக்கின்றனர். முதலமைச்சர் இது தொடர்பான அறிவிப்பை அறிவித்தால் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள் என்ற ஒரு கருத்தையும் பெற்றோர்கள் முன் வைக்கின்றனர்.

Categories

Tech |