Categories
மாநில செய்திகள்

கொரோனாவை வீழ்த்த ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்… பிரதமர் மோடி…!!

கொரோனாவை வீழ்த்த ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையில் பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து கொரோனாவை வீழ்த்துவதற்கு நம்மிடமுள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முக கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம். தடுப்பூசியை இதற்குமுன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |