Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதைக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க… தீவிரமாக நடைபெறும் பணி… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை தொகை 2000 ரூபாயை நியாய விலை கடைகளில் வழங்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணியானது நியாய விலை கடையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்துள்ளார். இதனை அடுத்து தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிவாரண நிதி தொகையை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குனர் பா.லோகநாதன், காஞ்சிபுரம் எம்.பி.ஜி. செல்வம், எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் முரளி, அரசு அலுவலர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, துணைப்பதிவாளர் சரோஜா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை தொடரந்து உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியிலும், ஒன்றியம் சாலவாக்கம் பகுதியிலும் நடைபெற்ற விழாவில் கொரோனா நிவாரண நிதியை பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ சுந்தர் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர் பாரி வள்ளல், மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் நாகன், கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் குமார் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |