கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் முதல்நபர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது என்று கேரள அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இவர் மார்ச் 22ஆம் தேதி துபாயில் இருந்து எர்ணாகுளத்துக்கு விமானம் மூலம் வந்திருக்கிறார். அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் இதுதான் முதல் உயிரிழப்பு என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.