Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: 150 மாணவர்கள், 10ஆசிரியர்களுக்கு கொரோனா – பேரதிர்ச்சி

ஆந்திராவில் பள்ளிகள் திறந்ததை அடுத்து 150 மாணவர்கள், 10ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டன. மத்திய அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலும் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் பள்ளி திறந்து இரண்டு நாளே ஆன நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் பள்ளியில் 150 மாணவர்கள், 10 ஆசிரியர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா கண்டறியப்படும் ஆசிரியர்கள், மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |