Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் 19 பேருக்கு கொரோனா …..!!

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 2 நாட்களில் 35 பேருக்கு கொரோனா  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தை மிரட்டி வரும் கொரோனாவின் தாக்கம் தலைநகர் சென்னையை உருக்குலைத்துள்ளது. சென்னையில் மட்டும் 916 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டு வரக்கூடிய சூழ் நிலையில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள டிஆர் பிள்ளை தெருவில் நேற்று 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் வாடகைக்கு வசித்த 11 தொழிலாளர்களுக்குகொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |