கர்நாடகாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் முன் காண பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு கடந்த வாரம் தடுப்பூசி செலுத்தப் பட்டது.
அதன் பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஐந்து மருத்துவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐந்து மருத்துவர்களில் இரண்டு பேர் கோவி ஷில்டு தடுப்பூசியும், மூன்று பேர் கோவக்சின் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் தான் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.