Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 82 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 2,064 ஆக அதிகரித்தது!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 82 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,064 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கல் என பார்த்தால், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகியவை தான். மகாராஷ்டிராவில், இன்று புதிதாக மொத்தம் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், மும்பையில் மட்டும் 59 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மகாராஷ்டிராவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,000ஐ நெருங்கியது. 2,064 ஆக பாதிப்புகள் உள்ளன. உயிரிழப்புகள் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, டெல்லியில் 1,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் முதல்முறையாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |