சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட ஸ்விகி ஊழியரின் வீட்டில் மேலும் 2 பேருக்கு தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு உணவு டெலவரி செய்யும் நபருக்கு பாதிப்பு உறுதியாகியிருந்தது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாடு முழுவதும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் 42 வது நாளாக அமலில் உள்ள நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
இதன் காரணமாக, அத்தியாவசிய கடைகள் மற்றும் சில கடைகளுக்கு மட்டும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னையில் நேற்று வரை 1,500க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் சென்னையில் சுமார் 6 மண்டலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 357 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கள் யாரும் உள்ளே வரவோ வெளியே செல்லவோ அனுமதி வழங்கப்படுவதில்லை.
அதேசமயம், சென்னையில் உணவு டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா பதித்த நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு டெலிவரி செய்த நபர் சென்ற வீடுகள் குறித்த விவரங்கள் சேகரிக்க பட்டு வருகின்றன. இதேபோல, சென்னை கே.கே.நகர் மின்வாரிய ஊழியர்கள் 6 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.