பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களுக்கு கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் என்னை நான் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். உங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. நீங்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.