காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் எண்ணிலடங்கா உயிர் பலியை வாங்கி வருகிறது. இவற்றைக் கட்டுப் படுத்துவதற்காக தற்போது தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பல பேருக்கு தொற்று ஏற்பட்டு கொண்டேதான் இருக்கிறது. இதில் நடிகர் நடிகைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் சூர்யா, சரத்குமார், விஷால், ஐஸ்வர்யா ராய், தமன்னா, நிக்கிகல்ராணி உள்ளிட்ட பல திரை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இந்நிலையில் மற்றுமொரு நடிகைக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது யார் என்றால், முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தில் நடித்த நடிகை நிக்கி தம்போலிக்கு தான் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு நான் சிகிச்சை பெற்று வருகிறேன். கூடிய விரைவில் பூரண குணம் ஆகி விடுவேன் என்று எதிர்பார்க்கிறேன். ரசிகர்கள் எனக்கு அளித்த அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.