Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?….மக்களே பாதுகாப்பாக இருங்க…. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை….!!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் நாமும் தொற்றினால் அவதிப்படும் சூழல் உருவாகும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அச்சம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 4வது அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் 25 ஆவது மெகா தடுப்பூசி முகாம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். அவர் பேசியதில், “தமிழகத்தில் இன்று நடைபெற்ற 25ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 5, 53 ,459 பேர் தடுப்பூசி போட்டுக் போட்டுக் கொண்டனர். மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் 5 ,32லச்சம் நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும் 4 கோடிக்கு மேற்பட்டோர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 92% பேர் முதல் தவணை மற்றும் 80% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மேலும் 12 முதல் 14 வயது உடையவர்கள் 4.29 லட்சம் பேர் தடுப்புசி செலுத்தி கொண்டனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்புசியை 51 லட்சம் பேரும் இரண்டாம் தவணை 1.34 கோடி பேரும் தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கும் நிலையில் பிற நாடுகளில் நாலாவது அலை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் நாமும் தொற்றினால் அவதிப்படும் சூழல் உருவாகும்” என்று ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் ஊரடங்கு அமல்படுத்துவது மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |