ஈரோட்டில் கொரோனாவிற்காக நிவாரண நிவாரணத்தொகை வசூலிப்பதாக கூறி ரூ 1 லட்சம் மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. பின் கால் அட்டென் செய்து பேசுகையில், எதிர் முனையில் பேசியவர் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும்,
கொரோனா நிவாரண நிதிக்காக உங்களது மருத்துவமனையிலிருந்து தொகை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து உங்களிடம் பதில் அளிப்பதாக சதீஷ் குமார் தெரிவித்தார்.
பின் மீண்டும் அவர் அழைப்பு விடுக்கையில் ஊழியர்களிடமும் மருத்துவ நிர்வாகத்திடமுமிருந்து வசூலித்து பணம் தருகிறேன். நேரில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவிக்க நான் வெளியூரில் இருக்கிறேன். அதே பகுதியை சேர்ந்த மூன்று பேரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்.
அதில் ஒருவர் பெயர் வெங்கடபதி என்று தெரிவித்தார். அதன்படி மூன்று பேர் நாங்கள் ஓய்வுபெற்ற நீதிபதி அனுப்பிய நபர்கள் என்று கூறி மருத்துவமனை ஊழியர்களிடம் வசூலித்த ரூபாய் 50,000 மருத்துவமனை நிர்வாகம் அளித்த ரூபாய் 50,000 என ரூ1,00,000 வாங்கிக் கொண்டனர். பின் ஊழியர் சதீஷ்குமார் ஓய்வு பெற்ற நீதிபதி குறித்து விவரம் கேட்டறிய முயன்ற போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டார்.
ஆனால் தர மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது சதீஷ் கூச்சலிட அருகில் இருந்த ஊழியர்கள் மூன்று பேரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கே அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கையில், அவர்கள் மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. பின் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.