Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை….. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தேசிய சராசரியை விட சென்னையில் 3 மடங்கு அதிகமாக சோதனை நடத்தப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது என இன்று காலை கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Categories

Tech |