பஞ்சாப்மாணவர் கை கழுவ நியாபகப்படுத்தும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் முதல் தமிழக சுகாதாரத்துறை வரை அனைத்து துறையும் கூறும் ஒரே விஷயம் அடிக்கடி கை கழுவுங்கள், உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள், குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பழகுங்கள் என்பதையே மிக அதிகமாக கூறிவருகின்றனர்.
அடிக்கடி கை கழுவுவதன் மூலம் நோயை பெருமளவு தவிர்க்கலாம் என்பதால் இந்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கையை அடிக்கடி கழுவ நியாபகப்படுத்தும் கருவி ஒன்றை பஞ்சாப் பொறியியல் மாணவர் வடிவமைத்துள்ளார். டாலர் வடிவிலான இதை கழுத்தில் அணிந்து கொண்டால் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும், ஒரு முறை பீப் சவுண்ட் அடிக்கும் அதைக் கேட்டவுடன் நாம் கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும்.
இது குறித்து அந்த மாணவர் கூறுகையில், பலருக்கு இது சாதாரணமாக தெரியலாம். ஆனால் நம்மில் பலருக்கு ஞாபகம் மறதி இருக்கும். சரியாக ஒரு நேரத்தை கடைப்பிடித்து எல்லாவற்றையும் செய்திட முடியாது. அதே போல் தான் இது நமது ஆரோக்கியம் சார்ந்தது. இதில் சிறிதளவு அலட்சியம் கூட இருத்தல் கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருவி எல்இடி பேட்டரி , டெம்ப்ரேச்சர் சென்சார், ஸ்டோரேஜ் கார்டு ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.