கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 2.5 கோடி பேர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக ஐநா சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது
கொரோனோ வைரஸ் ஒருபுறம் அதி விரைவாக இந்தியாவில் பரவி வரும் சூழ்நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தி வருகிறது.
பல தனியார் நிறுவனங்கள் சில காலங்களுக்கு கம்பெனியை மூடி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் 53 லட்சம் முதல் 2.5 கோடி பேர் வரை வேலை இழப்பார்கள் என்று ஐநா சபையின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலால் தற்போது தனியார் நிறுவன ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர்.