Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: கோயம்பேடு சந்தையில் 38 பேருக்கு கொரோனா ….!!

கடந்த 4 நாட்களில் கோயம்பேடு சந்தையில் மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

27, 28, 29, 30 என கடந்த நான்கு நாட்களில் மட்டும் கோயம்பேடு காய்கறி சந்தை, மலர் சந்தை, பழங்களுக்கான சந்தை என கோயம்பேட்டுக்குள்ளே வேலை பார்த்த 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பாக இன்றைக்கு மட்டுமே 9 நபர்களுக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது.

கோயம்பேடு பகுதியில் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் நேற்று 29ஆம் தேதி 7  நபர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த கூலி தொழிலாளர்கள்,  கூலித் தொழிலாளர் தம்பதி மற்றும் ஒரு தொழிலாளி அதே போல அங்கு இருக்கக்கூடிய கடைக்காரர் மற்றும் அவருடைய மகன், மனைவி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது.

கோயம்பேடு சந்தைகள் மாற்றம் ...

இன்றைக்கு பூக்கடை மற்றும் அதற்கு அருகில் இருந்த இரண்டு பழக்கடையில் பணி செய்த மூன்று ஆண்களுக்கு கொரோனா உறுதி செய்ய பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் இருந்த பல கடையில் வேலை பார்த்த மூன்று ஆண்களும் கொரோனா  உறுதி செய்ய பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் சென்னையில் கொரோனா பாதிப்பு 906ஆக பதிவாகியுள்ளதில் 38 பேர் கோயம்பேடு சந்தியில் உள்ளவர்கள் என்பது  அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாகபார்க்கப்படுகின்றது.

Categories

Tech |